பஞ்சலிங்க அருவியில் 5 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
திருப்பூர், 26 நவம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளான குறுமலை குழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கன மழை பெய்த காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் தடுப்புகளை தாண
Panjalinga Falls


திருப்பூர், 26 நவம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளான குறுமலை குழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கன மழை பெய்த காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் தடுப்புகளை தாண்டி நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 5 நாட்களாகவே பஞ்சலிங்க அருவியில் குளிக்க கோவில் நிர்வாகம் தரப்பில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாத காரணத்தால் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப சாமி பக்தர்கள் ஆர்வத்துடன் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN