Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 26 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தலைதூக்கி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு ரயில் நிலையங்களில் பிடிபடும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.
கஞ்சாவை தாண்டி மெத்தப்பட்டமைன் உள்ளிட்ட உயர் ரக போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட்டுகளை விற்றுவந்த வடமாநில நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த ராம்பாபு, அனில்குமார் என்ற இரண்டு வாலிபர்கள் கட்டிட வேலைக்காக மணிமங்கலம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வரும் நிலையில் அவர்கள் மாணவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட்டுகளை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்ததில் 120 கஞ்சா சாக்லேட்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN