சாத்தனூர் அணையிலிருந்து இன்று உபரிநீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை, 26 நவம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இன்று (நவ 26) காலை 6.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 1450 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தானது வினாடிக்கு 1180 கன அடியாக உள்ளது. இந்திய வானிலை ஆய்வ
சாத்தனூர் அணையிலிருந்து இன்று உபரிநீர் வெளியேயற்றம் -  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


திருவண்ணாமலை, 26 நவம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இன்று (நவ 26) காலை 6.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 1450 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தானது வினாடிக்கு 1180 கன அடியாக உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் 28.11.2025 முதல் மூன்று நாட்களுக்கு சாத்தனூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து இன்று காலை 10.00 மணியளவில் வினாடிக்கு 2500 கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்ற பட உள்ளது.

மேலும் நீர்வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .

Hindusthan Samachar / vidya.b