எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட தமிழக மீனவர்கள் 35 பேர் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.) தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட தமிழக மீனவர்கள் 35 பேர் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்


சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.)

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று

(நவ 03) அதிகாலையில், மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு மூலம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். இரண்டு விசைப்படகுகளில் தலா 10 பேரும், ஒரு விசைப்படகில் 11 பேரும், நாட்டுப் படகில் 4 பேரும் மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர்.

விசைப்படகு மீனவர்கள் 31 பேரும் நாகை மாவட்டத்தையும் நாட்டுப் படகு மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகுடன் 35 மீனவர்களையும் கைது செய்தனர்.

படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் இன்று (நவ 03) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை என்பது மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் உள்ளது எனவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b