Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் முதலாம் வகுப்பு உள்பட ஆரம்ப வகுப்புகளில் 25% சதவீத இடங்களை நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும்.
இன்னும் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு நிதி வழங்காததால் நடப்பு கல்வி ஆண்டில் மே மாதத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கையை தொடங்க முடியவில்லை.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது. இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மொத்தம் 81,927 மாணவர்கள் எல்.கே.ஜிக்கும் ஒன்றாம் வகுப்புக்கு 89,000 மாணவர்களும் விண்ணப்பித்தனர்.
இது கடந்த ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பம் காட்டிலும் குறைவு ஆகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,738 பள்ளிகளில், 70,449 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b