மின்வாரிய டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி வாலிபர் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி, 3 நவம்பர் (ஹி.ச) தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், கீழநம்பிபுரத்தில் உள்ள கீழத்தெருவைச் பரமசிவன் மகன் முனியசாமி (30), கண்பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்க
மின்வாரிய டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி வாலிபர்  தூத்துக்குடியில் பரபரப்பு


தூத்துக்குடி, 3 நவம்பர் (ஹி.ச)

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், கீழநம்பிபுரத்தில் உள்ள கீழத்தெருவைச் பரமசிவன் மகன் முனியசாமி (30), கண்பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த அவர், இன்று (நவ 03) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர், ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் ஆர்டிஓ அலுவலகம் அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள டிடிபிஎஸ் முதல் கயத்தாறு வரை செல்லும் 230 கேவி உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிப்காட் உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர் கீழே இறங்க மறுத்ததால் உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் டவரில் ஏறி அவரை மீட்டு கீழே அழைத்து வந்தார்.

பின்னர் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச் செல்லப்பட்டார்.

Hindusthan Samachar / vidya.b