Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 3 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தின் 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிகான் ஷோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் நடைபெற்றது.
இதில் திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், கோவை, வேலூர், ஈரோடு, கரூர், மதுரை, கன்னியாகுமரி உள்பட மாநிலம் முழுவதிலும் வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிஹான் ஷோட்டோகான் கராத்தே சங்க தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் விஜய் நடித்த திருப்பாச்சி பட புகழ் நடிகர் பெஞ்சமின், கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பெஞ்சமின்,
உடல் நல ஆரோக்கியத்தில் காப்பதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்த அவர்,இந்த போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ள குழந்தைகளை பாராட்டுவதாக தெரிவித்தார்.
திரைப்பட துறையில் முன்னனி நடிகராக இருந்து பல நூறு கோடி ரூபாய் வசூல் படங்களில் நடித்து வந்த விஜய் அரசியலில் ஈடுபட்டுள்ளதை வரவேற்பதாக கூறிய அவர்,விஜய் உடன் தாம் நடித்த திருப்பாச்சி படத்தை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
சிறு குழந்தைகள் மனதில் இடம் பிடித்த நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் இருப்பதாகவும்,அவர்களின் மனதில் இடம் பிடித்தவர்கற் முதல்வர் ஆகி உள்ளதாக முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆரை சுட்டி காட்டிய அவர்,
அந்த வரிசையில் நடிகர் விஜய் கண்டிப்பாக தமிழகத்தை ஆள போவது உறுதி என தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan