கோவையில் நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது - அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி
சென்னை, 3 நவம்பர் (ஹி.ச) அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது,
Spvelumani


சென்னை, 3 நவம்பர் (ஹி.ச)

அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,

கோவை மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது, மிகவும் வருத்தம் அளிக்கிறது.

கோவை மாவட்ட மக்கள் அமைதியான மக்கள் எனவும் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. அந்த வகையில் ஆர் எஸ் புரம் காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையம் என்ற பரிசையும் வாங்கியது.

ஆனால், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கடுமையான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ