இன்று பஹ்ரைன்-இந்தியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
புதுடெல்லி, 3 நவம்பர் (ஹி.ச.) இந்தியா - பஹ்ரைன் 5வது உயர்மட்ட கூட்டு ஆணைய கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்திப் பின் ரஷித் அல்சானி இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரை இந்திய அத
இன்று பஹ்ரைன்-இந்தியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை


புதுடெல்லி, 3 நவம்பர் (ஹி.ச.)

இந்தியா - பஹ்ரைன் 5வது உயர்மட்ட கூட்டு ஆணைய கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்திப் பின் ரஷித் அல்சானி இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

அப்துல்திப் பின் ரஷித் அல்சானி இன்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM