பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி இது - நயினார் நாகேந்திரன்
கோவை, 3 நவம்பர் (ஹி.ச.) தமிழக பாஜக தலைவர் நையினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது, கோவை விமான நிலையம் பின்புறம் 19-வயது இளம்பெண்ணை 3 பேர் கொண்ட போதை கும்பல், ஆண் நண்பரை தாக
Coimbatore Nainar Nagendran press conference


கோவை, 3 நவம்பர் (ஹி.ச.)

தமிழக பாஜக தலைவர் நையினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது,

கோவை விமான நிலையம் பின்புறம் 19-வயது இளம்பெண்ணை 3 பேர் கொண்ட போதை கும்பல், ஆண் நண்பரை தாக்கி விட்டு, பெண்ணை இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

தற்போது தமிழகத்தின் கேவலமான ஆட்சியை காண்பிக்கிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி இது.

கடந்த 2013 ஆண்டு இது போன்ற சம்பவம் நடைபெற்றது. அப்போது கனிமொழி பெரிய போராட்டம் நடத்தினர்.

கரூரில் நடந்த 41 படுகொலை இரவோடு இரவாக முதல்வர் வந்தார்.

முதல்வரும், கனிமொழி இது தொடர்பாக வாய் திறக்கவில்லை.

கோவையில் கஞ்சா விற்பனை அதிகம் என்பதால் தான் இவ்வாறு நடப்பதாக எங்கள் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

போதைக்கு இரண்டாவது தலை நகரமாக கோவை உள்ளது.

6 ஆயிரம் கொலை குற்றங்கள், 31 லாக்கப் மரணம் நடந்து உள்ளது.

நான் சொல்லுவது சரியா?! என்பது குறித்து முத்பவர் வெள்ளை அறிக்கை விட வேண்டும்.

பெண்களுக்கு இரவில் நடமாட பாதுகாப்பு இல்லை.

இன்று மாலை கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

நாளை தமிழ்நாடு முழுவது கண்டன ஆர்ப்பாட்டம்.

பெண்களை பெற்றோர் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுப்பது சரியா??

காவல்துறை நடவடிக்கை ஏற்புடையது இல்லை.

காவலர்கள் வெட்டும் சூழல் நடைபெற்று வருகிறது..

மாணவிகள் தொடர் பாதிப்பு தி.மு.க ஆட்சியின் தோல்வி.

நகரிகரமான ஊர் என கோவை சொல்லும் போது இப்படி நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இளைஞர்கள், மாணவர்கள் போதை பழக்கம் அடிமை ஆக கூடாது.. பெற்றோர்கள் குழந்தைகள் கண்காணிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை சம்பவம் ஈடுபட்டவர்களை குண்டாஸ் சட்டத்தில் பிடித்து போட வேண்டும்.

ஆயுதம் கலாசாரம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளது.

கோவையில் துணை குடியரசு தலைவர் பாதுகாப்பு குறைபாடு காவல்துறை மெத்தனப்போக்கு தான் காரணம்.

நூற்றுக்கு 200 சதவீதம் போலீசார் பாதுகாப்பு கோவையில் இல்லை.என்றார்

இந்த சம்பவம் குறித்து வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது,

சர்வதேச விமான நிலையத்தின் அருகே இப்படி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கோவையின் மீது தி.மு.க அரசுக்கு அக்கறை இல்லை.

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகளவில் உயர்ந்து உள்ளது.

கோவைக்கு படிப்பு மற்றும் வேலைக்கு பெண்களை அனுப்பிய பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகளிர் அணி இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இளம்பெண்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள பயிற்சி, பேப்பர் ஸ்ப்ரே போன்றவை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். வாக்கு அளித்த அரசு நம்மளை காப்பாற்ற இல்லை.

என்கவுண்டர் போட்டால் தப்பித்து விடலாம் என அரசின் மன நிலை உள்ளது. எதுவாக இருந்தாலும் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு துப்பாக்கி கொடுக்கலாமா?? என்றார்.

Hindusthan Samachar / V.srini Vasan