Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 நவம்பர் (ஹி.ச)
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரி சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தியப்பின் அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர் தெரிவித்ததாவது,
சிசிடிவி காட்சிகள் உட்பட பொதுவான ஆதாரங்களை கேட்டுள்ளனர் அதனை ஓரிரு நாளில் கொடுத்து விடுவோம்.
கலந்து கொண்டவர்களின் விவரம் சிசிடிவி காட்சிகள் உட்பட சில விவரங்களை பட்டியலிட்டுள்ளனர் அதை வழங்குவதற்கான சம்மன் வழங்க வந்துள்ளனர்.
தகவல்கள் மட்டுமே கேட்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழக காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்ட தகவல்களையும் அளித்திருந்தோம் அதே தகவல்களை சிபிஐ கேட்டுள்ளது அதையும் வழங்குகிறோம் என தெரிவித்து இருக்கிறோம்.
எங்களை ஆஜர் ஆகுவதற்கு எந்த சம்பந்தம் இதுவரை வரவில்லை வந்தால் நாங்கள் ஆஜராகி நேரில் விளக்கம் அளிப்போம்
அவர்களுடைய முதற்கட்ட விசாரணைக்கான தேவைப்படும் விவரங்களை கேட்டுள்ளனர் அதை மூன்று நான்கு நாட்களில் வழங்குவோம் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ