Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 3 நவம்பர் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலம் விகாராபாத் - ஹைதராபாத் சாலையில் இன்று (நவ 03) காலை 7.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி ஆர்டிசி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த பயங்கர விபத்தில் தற்போதைய நிலவரப்படி 24 பேர் இறந்ததாக செவெல்லா அரசு மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், செவெல்லாவில் நடந்த லாரி - பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனை மற்றும் உஸ்மானியா பொது மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அவர், ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம், போக்குவரத்து கழகம் சார்பில் தலா 2 லட்சம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b