வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை – இந்திய தேர்தல் ஆணையம்
சென்னை, 3 நவம்பர் (ஹி.ச) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. எதிர்ப்பார்த்தைவிட சிறப்பாக சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப
Election commission


சென்னை, 3 நவம்பர் (ஹி.ச)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

எதிர்ப்பார்த்தைவிட சிறப்பாக சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் திட்ட வட்டமாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுள்ள இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்களர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க கோரிய வழக்குகளில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்ந்து அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13 ம் தேதிக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது

Hindusthan Samachar / P YUVARAJ