Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் நாளை தொடங்க உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி குறித்து சென்னை பட்டினம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது பேசிய அவர்,
திமுக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்திவிட்டு, அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டி கொள்வதாக விமர்சித்தார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து மக்களை திசை திருப்பும் வகையில் தவறான பொய் பிரசாரத்தை ஸ்டாலின் மேற்கொள்வதாக தெரிவித்த அவர், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் நியாயம் இருப்பதால் தான் அதிமுக ஆதரிப்பதாக தெரிவித்தார்.
அனைத்து கட்சிகளுக்கும் பாக முகவர்கள் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால் கேள்வி கேட்கலாம், எதிர்த்து முறையிடலாம். அப்படி இருக்கையில் திமுக ஏன் பயப்பட வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வேண்டாம் என திமுக உச்சநீதிமன்றம் சென்றால், வேண்டும் என அதிமுகவும் உச்சநீதிமன்றத்தை நாடும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ,ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது அதிமுகவை விமர்சித்து வருகிறார்.
அவர் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ