தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றக் கூடாது - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கோவை, 3 நவம்பர் (ஹி.ச.) சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்,காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். திம
Former AIADMK Minister Sengottaiyan's interview at Coimbatore Airport


கோவை, 3 நவம்பர் (ஹி.ச.)

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்,காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.

திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை, இங்கும் அதிமுக (எடப்பாடி பழனிசாமி) மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் தலையெடுத்து வருவது நாடு அறிந்த உண்மை.

இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற புரட்சித்தலைவர் காலத்திலிருந்தே நான் பணிகளை செய்து வருகிறேன்.

தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றக் கூடாது, எனத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / V.srini Vasan