Enter your Email Address to subscribe to our newsletters

இராஜபாளையம், 3 நவம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் 21 வார்டு மற்றும் 22 வார்டு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் S .R .வெங்கடேஷ் மற்றும் தெற்கு நகர பொருளாளர் சுப்பையா 21 22வது வார்டு பகுதிகளான பூபால்பட்டி தெரு. விவேகானந்தர் தெரு .அங்கையராஜா தெரு. தெற்கு காவல் நிலைய பின்புறம் ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலதுணை தலைவரும் முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை என்ற ராஜா மக்களை சந்தித்து மக்களுடைய குறைகளை கேட்டு அறிந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் மனுக்களை பெற்றனர்.
இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் இராஜபாளையம் தெற்கு நகர தலைவர் பிரேம்ராஜா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN