Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 3 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையம்பட்டு கிராமத்தில் பழங்கால பொருட்கள் பதுக்கி பதுக்கி வைத்துள்ளதாக சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் பிரதாப்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் வைரக்கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுசம்பவ இடத்திற்குச் சென்ற சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் வைரக்கண்ணன் மற்றும் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் சம்பவ இடமான வளையம்பட்டு கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் வலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பழங்கால பொருட்கள் சங்கு,தாமரை விளக்கு,கிண்டி,அரபுகாபி குவலை உள்ளிட்ட பழங்கால பொருட்களை
சாக்கு முட்டையில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது உடனடியாக காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்துகாவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் பழங்கால பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக வலையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் துறையினர் பழங்கால பொருட்களை பதுக்கி வைத்திருந்த வலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரபாகரன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளாக பழங்கால பொருட்களை வீட்டில் சாக்கு முட்டையில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN