Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 3 நவம்பர் (ஹி.ச.)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிஐ அலுவலகத்தில் மூன்றாவது நாளாக வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த நகை அடகு கடை, எலக்ட்ரிகல் ஷாப், பேக்கரி, தனியார் இ சேவை மையம், மருந்து கடை உரிமையாளர்கள் என 8 பேர் ஆஜராகி உள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.
கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி இருக்கும் சிபிஐ அதிகாரிகள் முன்பு இதுவரை சம்மன் பெற்ற 15-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி இருந்தனர்.
சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள பயணியர் மாளிகையில் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN