மாற்றுத்திறனாளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஆசிரியர் கைது!
மயிலாடுதுறை, 3 நவம்பர் (ஹி.ச.) மயிலாடுதுறை சித்தர்காடு மறையூர் சாலையைச் சேர்ந்தவர் சாலமன் பிரபாகரன் (வயது 54). இவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அந்தப் பள்ளியில் கடந்
Child Harassment


மயிலாடுதுறை, 3 நவம்பர் (ஹி.ச.)

மயிலாடுதுறை சித்தர்காடு மறையூர் சாலையைச் சேர்ந்தவர் சாலமன் பிரபாகரன் (வயது 54). இவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், அந்தப் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 8-ம் வகுப்பு படித்து முடித்த 14 வயது மாற்றுத்திறனாளி மாணவி வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனே அந்த மாணவி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் மகளிர் போலீசார் விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவியின் கர்ப்பத்திற்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாலமன் பிரபாகரன்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் சாலமன் பிரபாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN