Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 3 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளை கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரிடம் மனு அளித்தனர்.இதனைத்தொடர்ந்து
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராதிகா பேசுகையில்,
வினித் என்ற நபர் தனது தோழியோடு விமான நிலையம் பின்புறத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மூன்று சமூக விரோதிகள் வினித்தை கடுமையாக தாக்கிவிட்டு , அவரது தோழியை கடத்திச்சென்று கூட்டு பாலியல் செய்துள்ள சம்பவம், கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவிகள், இளம்பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் கோவையில் அதிகரித்து வருவதாக, மாநகர காவல் ஆணையாளர் மற்றும் ஆட்சியருக்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் , தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.
இச்சம்பவத்தில் மாணவன், மற்றும் மாணவி இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மருத்துவ சிகிச்சைக்கான செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும்.
குற்றவாளிகளை கைது செய்து கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan