பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி, 3 நவம்பர் (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் விகாராபாத் - ஹைதராபாத் சாலையில் இன்று (நவ 03) காலை 7.30 மணியளவில் கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் பச்சிளம் குழந்தை
பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு


புதுடெல்லி, 3 நவம்பர் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம் விகாராபாத் - ஹைதராபாத் சாலையில் இன்று (நவ 03) காலை 7.30 மணியளவில் கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 24 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்துசென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலக எக்ஸ் தளத்தில் இன்று (நவ 03) பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

தெலுங்கானா மாவட்டம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இந்த கடினமான சூழ்நிலையில் உறவினர்களை இழந்துவாடு குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b