Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 3 நவம்பர் (ஹி.ச.)
மகளிருக்கான 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வந்தன.இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை என 8 அணிகள் பங்கேற்றன.
இதில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய இறுதிபோட்டி நவி மும்பையில் நேற்று (நவ 02) நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த இந்த ஆட்டத்தில் இந்தியா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இப்போட்டி தொடர்பாக இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டி அவர்களின் செயல்திறன் மிகுந்த திறமை மற்றும் நம்பிக்கையால் குறிக்கப்பட்டது.
போட்டி முழுவதும் அணி விதிவிலக்கான குழுப்பணி மற்றும் விடாமுயற்சியைக் காட்டியது. எங்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.
இந்த வரலாற்று வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b