Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 3 நவம்பர் (ஹி.ச.)
புதுடெல்லி பாரத் மண்டபத்தில் புவி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டை பிரதமர் மோடி இன்று
(நவ 03) தொடங்கி வைத்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது,
உலகளாவிய ஏஐ கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. கடந்த 10-11 ஆண்டுகளில் இந்தியா தொலைநோக்கு பார்வையுடன் இந்தியா செயல்படுகிறது என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் மட்டுமல்ல, தொழில்நுட்பம் மூலம் மாற்றத்தின் முன்னோடியாக மாறியுள்ளது.
பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக அறக்கட்டளையை நாங்கள் நிறுவியுள்ளோம். அறிவியல் கண்டுபிடிப்புகள் புதுமையை உள்ளடக்கியதாக மாறும் போது, சிறந்த சாதனைகளுக்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையில் உலகளாவிய புதிய மாற்றத்தை நாங்கள் காண்கிறோம். மாற்றத்தின் வேகம் அதிவேகமானது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப, உலகில் இன்று ஒரு பெரிய நாள். 21ம் நூற்றாண்டில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் காட்டுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருந்தது. இந்தத் தேவை ஒரு யோசனைக்கு வழிவகுத்தது. இந்தக் யோசனை தான் இந்த மாநாட்டினை நடத்த வழி வகுத்தது. கோவிட் காலத்தில், கடினமாக சூழலில், ஒரு உள்நாட்டு தடுப்பூசியை நாங்கள் உருவாக்கினோம்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இன்று டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமானது.
இந்த ரூ. 1 லட்சம் கோடி உங்களுக்கானது, இது உங்கள் திறன்களை அதிகரிக்க வழி வகுக்கும். புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
தனியார் துறையிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம். இதற்கு தான் முயற்சி செய்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b