வீடு வீடாக சென்று தேர்தல் துறையின் பூத் அலுவலர்கள் தீவிர திருத்தப் பணிகளுக்கான படிவங்களை வழங்குவார்கள் - புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தகவல்
புதுச்சேரி, 3 நவம்பர் (ஹி.ச.) புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாதங்களில் திவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த
Jawahar


புதுச்சேரி, 3 நவம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாதங்களில் திவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளை முதல் புதுச்சேரியில் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. வீடு வீடாக சென்று தேர்தல் துறையின் பூத் அலுவலர்கள் தீவிர திருத்தப் பணிகளுக்கான படிவங்களை வழங்குவார்கள். அந்த படிவத்தில் பெயர், தாய் - தந்தை பெயர், கணவன் / மனைவி பெயர் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் இதற்கு முன்பு 2001 ஆம் ஆண்டு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது, அந்த விவரங்கள் இருந்தாலும் வழங்கலாம். வாக்காளர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை வழங்க வேண்டும்.

வாக்காளர்கள், மொபைல் எண் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வைத்திருத்தல் வேண்டும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் பூத் அதிகாரிகள் இந்த விண்ணப்பங்களை மட்டுமே வழங்குவார்கள்.

என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN