Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 3 நவம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள கோட்டங்களுக்கு உட்பட்ட பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை (4.11.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை துணைமின் நிலையங்களில் நாளை (4.11.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C. பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் நாளை (4.11.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் கீழ்க்கண்ட இடங்களில் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம் நகரம், மலையடிகுறிச்சி
மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி. வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்பு கோயில், வென்றிலிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b