Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை , 3 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திமுக அரசையும் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தினர் கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து,
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், வேளாண் உற்பத்தி செம்மையாக வளர்ச்சி அடைந்து உள்ளது என்று தெரிவித்த வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வேளாண் துறைக்காக
50-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதியை தெரிவித்து தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை.
குறிப்பாக தேர்தல் அறிக்கை 33ல் விவசாயகடன், நகைகடன், மகளிர் சுயஉதவிகுழு கடன், 34ல் தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ள நிலுவைத் தொகை வழங்கப்படும், 42ல் 100 வேளையை 150நாளாக உயர்த்தபடும், 57ல் தனிநபர் பயிர் காப்பீடு, 75ல் நெல் கொள்முதல் 3500, கரும்பு சாகுபடி 5,000 மற்றும் 78ல் இலவச விதைகள் வழங்கபடும் போன்ற வேளாண் சம்பந்தமான சுமார் 50க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இந்த அரசு விவசாயிகளை ஏமாற்றி விட்டது.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாய பயிர் காப்பீடு தொகை கிடைக்காமலும் வேளாண் பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமலும் வேளாண்துறை பின்னடைவு ஏற்பட்டு வருகின்ற சூழலில்
தற்போது உள்ள வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழகத்தில் விவசாயம் செம்மையாக வளர்ச்சி அடைந்து உள்ளதாக பொய் சொல்லுவதைக் கண்டித்து,
திமுக அரசுக்கும் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / Durai.J