மம்தா பானர்ஜி தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நாளை போராட்டம்
கொல்கத்தா, 3 நவம்பர் (ஹி.ச.) பீகாரை தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த 4 மாநிலங்களிலும் அடுத
நாளை கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக போராட்டம்


கொல்கத்தா, 3 நவம்பர் (ஹி.ச.)

பீகாரை தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இந்த 4 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. எஸ்.ஐ.ஆருக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் நாளை (4-ந்தேதி) கொல்கத்தாவில் போராட்டம் நடக்கிறது. கட்சியின் பொதுச் செயலாளரான அபிஷேக் பானாஜியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதற்கிடையே மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா தலைவருமான சுவேந்து, பூத் நிலை அதிகாரிகளுக்கு (பி.எஸ்.ஒ மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM