Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 3 நவம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பயணிகள் 70 பேருடன் இன்று (நவ 03) அதிகாலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த கிராவல் மண், பேருந்து பயணிகள் மீது கொட்டியது.
இதில் பயணிகள் 19 பேர் தப்பிக்க வழியின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தால் செவெல்லா - விகாராபாத் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் செவெல்லா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கானாபூர் கேட் அருகே அரசு மற்றும் லாரி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ரங்கா ரெட்டி மாவட்டத்தின் செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்ஜாகுடா அருகே அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்த துயர விபத்து அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவும், காயமடைந்த பயணிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுத்துகிறேன்.
இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b