Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.)
பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கோட்டை, தாம்பரம்-நாகர்கோவில், சென்டிரல்-திருவனந்தபுரம், சென்டிரல்-ஆழப்புலா, கோவை-ராமேசுவரம் ஆகிய ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.20681) ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (20682) ஏப்ரல் 30-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி 2, படுக்கை வசதி கொண்ட பெட்டி 3, 2-வது வகுப்பு பொதுபெட்டி 1 தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.
கடந்த 1-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்தும், நேற்று முதல் செங்கோட்டையில் இருந்தும் கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22657), ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22658) ஏப்ரல் 30-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி 2, படுக்கை வசதி கொண்ட பெட்டி 3, 2-வது வகுப்பு
பொதுபெட்டி 1 தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்தும், நேற்று முதல் நாகர்கோவிலில் இருந்தும் கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22639), ஏப்ரல் 27-ந்தேதி வரையிலும், ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22640) ஏப்ரல் 28-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 1 தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12695) இன்று (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12696) நாளை (செவ்வாய்கிழமை) முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரையிலும்,
2-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 1 தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
கோவையில் இருந்து ராமேசுவரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16618) வருகிற 4-ந்தேதி முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரையிலும், ராமேசுவரத்தில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16617), வருகிற 5-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும் படுக்கை வசதி பெட்டி 1 இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b