மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு 2வது பேட்ச் இன்று துவங்கியது
கோவை, 3 நவம்பர் (ஹி.ச.) மத்திய அரசின் நெசவாளர் சேவை மையம் மற்றும் கோவை ராமநாதபுரத்திலுள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி பயிற்சி மையம் இணைந்து நடத்தும் ஊக்கத் தொகையுடன் 45 நாட்கள் மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவுத்திறன் மேம்ப
The 45-day Handloom Weaving Skill Development Training Class under the Central Government's SAMARTH Scheme with an incentive grant, jointly conducted by the Central Government's Weaver Service Center and the Silk Village Handloom Research Training Center in Ramanathapuram, Coimbatore, commenced today for the 2nd batch.

கோவை, 3 நவம்பர் (ஹி.ச.)

மத்திய அரசின் நெசவாளர் சேவை மையம் மற்றும் கோவை ராமநாதபுரத்திலுள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி பயிற்சி மையம் இணைந்து நடத்தும் ஊக்கத் தொகையுடன் 45 நாட்கள் மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு 2வது பேட்ச் இன்று துவங்கியது,

மத்திய அரசின் சேலம் நெசவாளர்கள் சேவை மையம் சார்பில் சமர்த் 2வது பேட்ச் துவக்க விழா நிகழ்வில்,

மத்திய அரசு சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன், கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் Dr.அல்லிராணி, ஆவாரம்பாளையம் சர்வோதயா சங்க செயலாளர் சிவகுமார், ஜவுளி மற்றும் ஆடை தொழிலமைப்பு அறிவுரையாளர் ஜவுளித்துறை திறன் தலைவர் பெரியசாமி, ஈரோடு எட்ஜ் ஹைட்ரா வென்ட்சர் ஆலோசகர் பொன்னுச்சாமி, சில்க் வில்லேஜ் நிறுவனர் கைத்தறி முருகேசன்,சில்க் வில்லேஜ் நிர்வாக அதிகாரிகள் பழனிவேல், ராஜாராம், முருகானந்தம், மற்றும் சில்க் வில்லேஜ் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

45 நாட்கள் பயிற்சியில் கைத்தறி, ஜக்கார்ட் டிசைனிங், மேட் வீவிங் உள்ளிட்ட வகுப்புகள் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan