Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 3 நவம்பர் (ஹி.ச)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதற்கு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும், மக்களுக்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றியும், சாதனையும் மேன்மேலும் தொடர மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ