திருமண விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் பயணம்
சேலம், 3 நவம்பர் (ஹி.ச.) தர்மபுரி திமுக எம்பி ஆ.மணியின் இல்ல திருமண விழா இன்று (நவ 03) தர்மபுரியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நில
திருமண விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் பயணம்


சேலம், 3 நவம்பர் (ஹி.ச.)

தர்மபுரி திமுக எம்பி ஆ.மணியின் இல்ல திருமண விழா இன்று

(நவ 03) தர்மபுரியில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.

அங்கு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க திரண்டுள்ளனர். பின்னர் முதல்வர் ஸ்டாலின் தர்மபுரிக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் முதல்வர் ஸ்டாலின் விருந்து உபச்சார நிகழ்ச்சியை முடித்து விட்டு, மதியம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு திரும்புகிறார்.

பின்னர் அவர் சென்னைக்கு விமானத்தில் செல்கிறார். முதல்வர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு

100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b