பாத்திர கடையில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது
கோவை, 30 நவம்பர் (ஹி.ச.) கோவை கணபதி சங்கனூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சிவக்குமார் என்பவர் தக்‌ஷா மெட்டல் மார்ட் என்ற பெயரில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். கடையை அவரது மனைவி கீர்த்தனா என்பவர் எடுத்து வைத்துக்கொண்டு இருந்த பொழுது கட
A fire accident occurred at a vessel shop near the Sanganoor petrol pump in Coimbatore during the night, causing the cylinders stored there to explode one after another, creating a shocking situation.


கோவை, 30 நவம்பர் (ஹி.ச.)

கோவை கணபதி சங்கனூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சிவக்குமார் என்பவர் தக்‌ஷா மெட்டல் மார்ட் என்ற பெயரில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

கடையை அவரது மனைவி கீர்த்தனா என்பவர் எடுத்து வைத்துக்கொண்டு இருந்த பொழுது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது அந்த கடையில் வைக்கப்பட்டு இருந்த கடையில் இருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது.

நள்ளிரவு நேரத்தில் அடுத்தடுத்து 5 க்கும் அதிகமான சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் பாத்திரகடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்,விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கபட்டது.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினரும், சரவணம்பட்டி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடையில் எதற்காக சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பொது மக்கள் யாருக்கும் இந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

Hindusthan Samachar / V.srini Vasan