Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 நவம்பர் (ஹி.ச.)
கோவை சோலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கா. சி. குமரேசன் அவர்கள் எழுதிய ஒரு கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள டிவிஹெச் விஸ்தா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் ஆல்கோவ் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
சென்னை, இலக்கியச் சோலை திங்கள் இதழ் சார்பாக வெளியிடப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை தலைவரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் செயலாளருமாண சொல்லின் செல்வர் சிந்தனை கவிஞர் கவிதாசன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக, மகாகவி பாரதியார் உயராய்வு, இயக்குநர், பேராசிரியர். சி சித்ரா அவர்கள் முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
எஸ். பி. ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின், முதுநிலை மேலாளர், திரு. சிவகுமார் அன்பழகன் விழா பற்றிய தொகுப்புரையை வாசித்தார்.
விழா முடிவில் ஏற்புரையையும் நன்றியுறையையும் கவிஞர் கா. சி. குமரேசன் வசித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan