Enter your Email Address to subscribe to our newsletters

போபால், 30 நவம்பர் (ஹி.ச.)
மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் இளைய மகன் அபிமன்யு யாதவுக்கும், மணமகள் இஷிடா யாதவுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
21 ஜோடிகளின் மெகா திருமண நிகழ்ச்சியில், தனது மகனின் திருமணம் நடைபெறும் முதல்வர் மோகன் யாதவ் கூறியிருந்தார். அதன்படி, அபிமன்யுவின் திருமணம் இன்று (நவ 30) 21 ஜோடி மணமக்களின் திருமணத்துடன் இணைந்து நடைபெற்றது. ஆக மொத்தம் 22 ஜோடிகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
திருமணத்திற்கு மணமக்கள் இருவரும் சொகுசு கார்களுக்கு பதிலாக எளிமையான, பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டனர். அபிமன்யுவும், இஷிதாவும் மாட்டு வண்டியில் அமர்ந்தபடி வரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
இதில், 11 மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், முதல்-மந்திரிள், எட்டு மாநில ஆளுநர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். யோகா குரு ராம்தேவ் உள்பட பல்வேறு சாமியார்களும் பங்கேற்றனர்.
இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
திருமண விழா இன்று முடிந்ததும், அதர்வா ஓட்டலில் பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b