அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 9 பேர் பலி 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சிவகங்கை, 30 நவம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக திருப்பத்தூர், மதுரை மற்றும்
விபத்து


சிவகங்கை, 30 நவம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக திருப்பத்தூர், மதுரை மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசாத் தெரிவித்ததாவது,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் உள்ள கும்மங்குடி பாலம் அருகே இன்று மாலை திருப்பத்தூரிலிருந்து காரைக்குடிக்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

இதேபோல், அதே வழியில் காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு மற்றொரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில், பிள்ளையார்பட்டி அருகே இந்த இரண்டு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன் பக்கமும் முற்றிலும் சேதமடைந்தது.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இறந்தனர்.

மேலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் திருப்பத்தூர், மதுரை மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதால், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

இது தொடர்பாக திருப்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்று தெரிவித்தார்.

இந்த கொடூர விபத்து சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Hindusthan Samachar / Durai.J