பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை - ஆளுநருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில்
சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.) ஆளுநர் மாளிகைக்கு மக்கள் பவன் என்று பெயர் வைக்கப்படுவதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி கோரிக்கை வைத்து மாற்றப்பட உள்ள நிலையில் இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவி
Mks


Hsh


சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.)

ஆளுநர் மாளிகைக்கு மக்கள் பவன் என்று பெயர் வைக்கப்படுவதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி கோரிக்கை வைத்து மாற்றப்பட உள்ள நிலையில் இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை

சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ