Enter your Email Address to subscribe to our newsletters



கோவை, 30 நவம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரது மகன் பாலமுருகன்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் திருமணமாகி,இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
30 வயதான ஸ்ரீபிரியாவிற்கும் அவரது கணவர் பாலமுருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கோவையில் தங்கி வேலை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார்.
காந்திபுரம் இரண்டாவது வீதி பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்த நிலையில், பாலமுருகனின் உறவினர் இசக்கி என்பவருடன் பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக பிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பாலமுருகனின் உறவினர். இசக்கி ராஜா whatsappல் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பாலமுருகன் கோவை வந்த நிலையில், மனைவி தங்கி இருக்கும் தனியார் மகளிர் விடுதிக்கு வந்து உள்ளார்.மனைவி பிரியாவை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில், அவர் வர மறுக்கவே இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து பாலமுருகன் மறைத்து வைத்து இருந்த அருவாளை கொண்டு மகளிர் விடுதி வளாகத்திலேயே சரமாரியாக மனைவியை பிரியாவை வெட்டி கொலை செய்து உள்ளார்.
தனியார் மகளிர் தங்கும் விடுதி வளாகத்திலேயே மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு , காவல் துறையினர் வரும் வரை அங்கேயே கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்த பாரமுருகன், அதை புகைபடமாகவும் எடுத்து துரோகத்தின் சம்பளம் மரணம் என ஸ்டேடஸ் வைத்து உள்ளார்.
இதனை அடுத்து ரத்தினபுரி போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Hindusthan Samachar / V.srini Vasan