Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 நவம்பர் (ஹி.ச.)
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதுடெல்லியில் இன்று (நவ.,30) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
.கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கவுரவ் கோகோய், திமுக எம்பி டி.ஆர்.பாலு, திரிணமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் , டில்லியில் திமுக எம்பி டிஆர்பாலு நிருபர்களிடம் கூறியதாவது:
எந்த பிரச்னைகள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்துரைத்தோம். தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) தேவையற்றது.
நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பார்லியில் குரல் எழுப்புவோம்.
100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு 6 மாதங்களாக வழங்கவில்லை. எஸ்ஐஆருக்கு தமிழக அரசின் எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b