கணபதி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
கோவை, 30 நவம்பர் (ஹி.ச.) கோவை கணபதிமாநகர் வெற்றி விநாயகர் நகரில் உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அருள்மிகு கால பைரவர் சந்நிதி பிரதிஷ்டை விழா கடந்த 28ம் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கி நடந்து வந்தது. கணபதி ஹோம
Ganapathi Vetri Vinayagar Temple Kumbabishekam Ceremony


Ganapathi Vetri Vinayagar Temple Kumbabishekam Ceremony


கோவை, 30 நவம்பர் (ஹி.ச.)

கோவை கணபதிமாநகர் வெற்றி விநாயகர் நகரில் உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அருள்மிகு கால பைரவர் சந்நிதி பிரதிஷ்டை விழா கடந்த 28ம் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கி நடந்து வந்தது.

கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமம், வாஸ்து சாந்தி, த்வார பூஜைகள், திருமுறை பாராயாணம், அஷ்ட லட்சுமி பூஜை மற்றும் நான்குகால பூஜையை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மகாகும்பா பிஷேக விழா நடைபெற்றது.

பிரம்மஸ்ரீ கல்யாண ராம சர்மா தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மூலவர் ராஜகோபுர கலசம், காலபைரவர் கலசம், நவகிரக சந்நிதி கலசத்திற்கு காசி, பவானி கூடுதுறை, கொடுமுடி, கங்கை தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வந்த புனித தீர்த் தத்தை கலசத்தில் ஊற்றினார்கள்.

நூற்றுக் கணக்கான பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி மகா அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தலைவர் பானுமதி நீலமேகம், துணைத்தலைவர் விஸ்வாம்பரன், செயலாளர் வீ.முருகன், இணை செயலாளர் வேணுகோபால், பொருளாளர் அரங்கநாதன், இணை பொருளாளர் சவுரிராஜன், அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Hindusthan Samachar / V.srini Vasan