Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 நவம்பர் (ஹி.ச.)
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பிராந்திய பகுதிகளில் காற்று மாசுபாடு மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது.இதனால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காற்றின் தரக்குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் அது சுத்தமான காற்று, 51 முதல் 100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்க நிலை. 101 முதல் 150 வரை இருந்தால் காற்று மாசு சிலருக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும்.
151 முதல் 200 வரை இருந்தால் அனைவரின் ஆரோக்கியத்துக்கும் எதிரானது. 201 முதல் 300 வரை எனில் மிகவும் மோசம். 301க்கு மேல் எனில் சுகாதார எச்சரிக்கை நிலை ஆகும்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று (நவ 30) காற்றின் தரம் சற்று முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் காற்றின் தரக்குறியீடு 369 ஆக
(மிக மோசம்) இருந்த, இன்று சிறிது முன்னேறி காற்றின் தரமானது 270 ஆக பதிவாகியுள்ளது.
இருப்பினும் இதுவும் மோசம் என்ற அளவிலேயே குறிக்கப்படுகிறது. காற்று சற்று அதிகம் வீசியதால் மாசுபாடு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஷாதிபூர், ஆர்.கே.புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மிக மோசமான பிரிவிலேயே காற்றின் தரம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b