உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி நமது இந்திய நாட்டின் பெருமை - பிரதமர் மோடி!
புதுடெல்லி, 30 நவம்பர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ''மனதின் குரல்'' நிகழ்ச்சியின் 128 -வது பதிப்பு இன்று (நவம்பர் 30) காலை 11 மணிக்கு ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷனில் ஒலிபரப்பானது. பிரதமர் மோடி மனதின் குரலில் - ம
மோடி


புதுடெல்லி, 30 நவம்பர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 128 -வது பதிப்பு இன்று (நவம்பர் 30) காலை 11 மணிக்கு ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷனில் ஒலிபரப்பானது.

பிரதமர் மோடி மனதின் குரலில் - மன் கீ பாத் நிகழ்ச்சியில் காசித் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் கோவை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு அங்கும் தமிழகத்தை பெருமையாக தான் பேசியதாகக் கூறியுள்ளார்.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி நமது இந்திய நாட்டின் பெருமை என்று அவர் பாராட்டிக் கூறினார்.

உலகின் பல நாடுகளோடு ஒப்பிட்டு நமது காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, நாகலாந்து தேன் உற்பத்தி விசாகப்பட்டினத்தின் கப்பல் கட்டும் துறைமுகம் போன்றவையெல்லாம் நமது இந்திய நாட்டின் பெருமைக்குரியவை என்று விரிவாக எட்டுத்திக்கிலும் இந்தியாவை இணைத்து பல விடயங்களை தன் மனப்பான்மையை உளப்பூரிப்புடன் வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த மாபெரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமையானது.என்றார்.

Hindusthan Samachar / Durai.J