திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.) வங்கக்கடலில் நிலவி வரும் டித்வா புயல் இன்று மாலை 5.30 மணிக்குள் வலுவிழக்கும் நிலையில் திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு இன்று (நவம்பர் 30) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ம
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.)

வங்கக்கடலில் நிலவி வரும் டித்வா புயல் இன்று மாலை 5.30 மணிக்குள் வலுவிழக்கும் நிலையில் திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு இன்று (நவம்பர் 30) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வங்கக்கடலில் நிலவி வரும் டித்வா புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை வட தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் புயல் நிலவக்கூடும்.

டித்வா புயல் இன்று மாலை 5.30 மணிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. கரையை கடக்க வாய்ப்பு இல்லை. தற்போது சென்னைக்கு 220 கிலோ மீட்டரிலும், புதுச்சேரிக்கு 130 கிலோ மீட்டரிலும், வேதாரண்யத்திற்கு 120 கிலோ மீட்டர் தொலைவிலும் டித்வா புயல் மையம் கொண்டுள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு இன்று (டிசம்பர் 30) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நாளை (டிச.,01) திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 5ம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / vidya.b