Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 30 நவம்பர் (ஹி.ச.)
கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே பலியான 12 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த குழுவில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் வி.மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்புக்குழு கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை கண்காணிக்க நாளை (டிச 1) கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை பார்வையிட்டு நேரில் ஆய்வு மேற் கொள்கிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b