Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.)
டிட்வா புயல் தாக்கத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள செய்தி மனதை மிகுந்த துயரத்தில் ஆழ்த்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளாதாவது,
இத்துடன், 149 கால்நடைகள் உயிரிழந்ததும், 234 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்ததும் இந்த புயல் மக்களின் வாழ்வாதாரத்தையும் அடிப்படை பாதுகாப்பையும் தீவிரமாக பாதித்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம், கால்நடை இழப்புகளுக்கான நஷ்டஈடு, குடிசை வீடு சேதங்களுக்கான அவசர உதவி அனைத்தும் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் கால்நடை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம். மீட்பு நிவாரண பணிகள் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதிகாரிகள் வெளியிடும் ஒவ்வொரு அறிவுறுத்தலையும் கவனமாக பின்பற்றுவது, உயிர்களையும் சொத்துகளையும் காக்கும் மிக முக்கியமான நடவடிக்கை. மக்கள் அனைவரும் அத்தியாவசிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பேரிடர் நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, நமது மக்களை காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ