Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.)
தமிழைக் காப்பாற்ற, தான் மட்டுமே அவதாரம் எடுத்து வந்ததாக, வெற்றுப் படாடோபம் காட்டும் தி.மு.க
ஆட்சியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கட்டாய தமிழ் பாடத்தில் 85 ஆயிரம் பேர் தோல்வி யடைந்திருக்கிறார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இது அந்த 85 ஆயிரம் ஆசிரியர்களின் தோல்வி மட்டுமல்ல... தமிழை காப்பாற்றுகிறேன் என்று வெற்று வசனம் பேசும் இந்த ‘வாய் சவடால்’ ஆட்சியின் தோல்வி.
இந்தத் தேர்வை எழுதியவர்கள் எல்.கே.ஜி மாணவர்கள் அல்லர். பட்டப் படிப்பு படித்த ஆசிரியர்கள். இவர்களுக்கே தமிழில் இவ்வளவு தடுமாற்றம் என்றால் இவர்கள் பள்ளிகளில் படித்த போது தமிழ் எந்த அளவுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழை வளர்க்கிறோம் என ஓயாமல் உருட்டுவதற்கும், நடைமுறையில் தமிழ் எந்த அளவுக்கு வளர்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கும் இந்த தேர்வு முடிவுகள் சாட்சி.
தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் தி.மு.க., தனது முந்தைய ஆட்சி காலங்களிலும் இப்போதும் தமிழுக்கு செய்த துரோகத்தின் வெளிப்பாடு தான் இது.
அனைவருக்குமான தமிழ் கல்வியை உறுதிப்படுத்திட, இந்த போலி தமிழ் பற்றாளர்களை விரட்டி அடிப்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ