Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 30 நவம்பர் (ஹி.ச.)
கோவை, ராமநாதபுரம் பரி நகரை சேர்ந்தவர் சங்கர் பிரிட்டானியா பிஸ்கட் விநியோகம் நிறுவனம் நடத்தி வந்தார் இவரது நிறுவனத்தில் முருகன் என்பவர் விற்பனையாளராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் நகரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு முருகன் வாயிலாக பிஸ்கட் சப்ளை செய்யப்பட்டது.
சில மாதங்களாக விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட்களுக்கான தொகை சங்கருக்கு வரவில்லை, பின்னர் கடைக்காரர்களிடம் அவர் விசாரித்தார். அவர்கள் முருகனிடம் பணம் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
இது குறித்து முருகனிடம் விசாரித்ததில்,
அவர் வேலைக்கு வரவில்லை சந்தேகம் அடைந்த சங்கர் நிறுவனத்தின் வரவு செலவுகளை ஆய்வு செய்த போது ஆறு மாதங்களில் 35 லட்ச ரூபாய் பணம் கணக்கில் வராதது தெரியவந்து உள்ளது. ஏமாற்றப்பட்டது உணர்ந்தவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் மீது வழக்கு பதிவு செய்து தலைமுறைவான முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan