சபரிமலைக்கு சென்னையில் இருந்து சேலம் வழியாக கொல்லத்திற்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சேலம்,4 நவம்பர் (ஹி.ச.) கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி பக்தர்களின் வசதிக்காக
அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சேலம் வழியாக கொல்லத்திற்கு 2 சபரிமலை சிறப்பு ரெயில்கள் இயக்கம்


சேலம்,4 நவம்பர் (ஹி.ச.)

கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி கோவிலுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சேலம் வழியாக கொல்லத்திற்கு 2 சபரிமலை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கு (வண்டி எண் 06127) வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 22-ந்தேதி வரை வியாழக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம் வழியாக அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வருகிற 21-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 23-ந்தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (வண்டி எண் 06128) இயக்கப்படுகிறது. அதன்படி கொல்லத்தில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்று அடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கு (வண்டி எண் 06117) வருகிற 22-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 24-ந்தேதி சனிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு (வண்டி எண் 06118) வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 25-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM