Enter your Email Address to subscribe to our newsletters

இம்பால், 4 நவம்பர் (ஹி.ச.)
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்கள் இடையே நடைபெற்று வரும் மோதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இனக்குழுக்களை சேர்ந்த ஆயுதக்குழுவினரை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்துள்ள மத்திய அரசு இந்த பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க பாதுகாப்புப்படையினரை மணிப்பூரில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்நிலையில், மணிப்பூரின் கம்ஜொங் மாவட்டம் ஹனிப் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று
(நவ 04) அதிகாலை அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டிற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எஞ்சிய பயங்கரவாதிகள் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்றுவிட்டனர்.
இதையடுத்து என்கவுன்டர் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b