தடாகம் பகுதியில் உள்ள சேம்பரில் இறந்த நிலையில் ஒருவரை மீட்டு பிரத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து விசாரணை !
கோவை, 4 நவம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலையம் உட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் சேம்பரில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்த நிலையில் சேம்பரின் உரிமையாளர் பிரதீப்கண்ணன் தடாகம் காவல் நிலையம் போலீசருக்கு தகவல் அளித்தார்.
A person was found dead in a chamber in the Thadagam area, and the police have sent the body for post-mortem examination and are conducting an investigation.


A person was found dead in a chamber in the Thadagam area, and the police have sent the body for post-mortem examination and are conducting an investigation.


கோவை, 4 நவம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலையம் உட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் சேம்பரில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்த நிலையில் சேம்பரின் உரிமையாளர் பிரதீப்கண்ணன் தடாகம் காவல் நிலையம் போலீசருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்தி விசாரணையில் இறந்தவர் தடாகம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ராகவன் என்பதும் அவரது மனைவி ராஜியுடன் கடந்த ஆறு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.மேற்கண்ட ராகவன் 24 மணி நேரமும் குடிக்கும் பழக்கமுடையவர் என்பதும் குடிபோதையில் கீழே விழுந்துள்ளாரா அல்லது யாராவது தாக்கி இறந்துள்ளாரா என்பது குறித்து தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா விசாரித்து வருகிறார்.

பின்னர் அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Hindusthan Samachar / V.srini Vasan